விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா
- 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰٓ
ஒலிபெயர்ப்பு: 'Abasa wa tawallaa.
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
- 2
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
ஒலிபெயர்ப்பு: An jaa-ahul 'a-maa
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
- 3
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
ஒலிபெயர்ப்பு: Wa maa yudreeka la'allahu yaz zakkaa.
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
- 4
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
ஒலிபெயர்ப்பு: Au yaz zak karu fatanfa 'ahuz zikraa.
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
- 5
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
ஒலிபெயர்ப்பு: Amma manis taghnaa
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
- 6
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
ஒலிபெயர்ப்பு: Fa-anta lahu tasaddaa
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
- 7
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
ஒலிபெயர்ப்பு: Wa ma 'alaika allaa yaz zakka.
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
- 8
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
ஒலிபெயர்ப்பு: Wa amma man jaa-aka yas'a
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
- 9
وَهُوَ يَخْشَىٰ
ஒலிபெயர்ப்பு: Wahuwa yakhshaa,
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
- 10
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
ஒலிபெயர்ப்பு: Fa-anta 'anhu talah haa.
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
- 11
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ
ஒலிபெயர்ப்பு: Kalla innaha tazkirah
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
- 12
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
ஒலிபெயர்ப்பு: Faman shaa a zakarah
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
- 13
فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ
ஒலிபெயர்ப்பு: Fi suhufim mukar rama,
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
- 14
مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ
ஒலிபெயர்ப்பு: Marfoo'atim mutah hara,
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
- 15
بِأَيْدِى سَفَرَةٍۢ
ஒலிபெயர்ப்பு: Bi'aidee safara
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
- 16
كِرَامٍۭ بَرَرَةٍۢ
ஒலிபெயர்ப்பு: Kiraamim bararah.
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
- 17
قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ
ஒலிபெயர்ப்பு: Qutilal-insanu maa akfarah.
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
- 18
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
ஒலிபெயர்ப்பு: Min aiyyi shai-in Khalaq
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
- 19
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
ஒலிபெயர்ப்பு: Min nutfah; khalaqahu faqad-darah.
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
- 20
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
ஒலிபெயர்ப்பு: Thummas sabeela yas-sarah
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
- 21
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
ஒலிபெயர்ப்பு: Thumma amatahu fa-aqbarah
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
- 22
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
ஒலிபெயர்ப்பு: Thumma iza shaa-a ansharah
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
- 23
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
ஒலிபெயர்ப்பு: Kalla lamma yaqdi maa amarah.
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
- 24
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
ஒலிபெயர்ப்பு: Falyanzuril insanu ilaa ta-amih
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
- 25
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّۭا
ஒலிபெயர்ப்பு: Anna sabab nalmaa-a sabba.
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
- 26
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّۭا
ஒலிபெயர்ப்பு: Thumma sha qaqnal-arda shaqqa.
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
- 27
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّۭا
ஒலிபெயர்ப்பு: Fa ambatna feeha habba
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
- 28
وَعِنَبًۭا وَقَضْبًۭا
ஒலிபெயர்ப்பு: Wa 'inabaw-wa qadba
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
- 29
وَزَيْتُونًۭا وَنَخْلًۭا
ஒலிபெயர்ப்பு: Wa zaitoonaw wanakh la'
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
- 30
وَحَدَآئِقَ غُلْبًۭا
ஒலிபெயர்ப்பு: Wa hadaa-iqa ghulba
அடர்ந்த தோட்டங்களையும்,
- 31
وَفَٰكِهَةًۭ وَأَبًّۭا
ஒலிபெயர்ப்பு: Wa faki hataw-wa abba.
பழங்களையும், தீவனங்களையும்-
- 32
مَّتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
ஒலிபெயர்ப்பு: Mata'al-lakum wa li-an'amikum.
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
- 33
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
ஒலிபெயர்ப்பு: Faiza jaa-atis saakhah.
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
- 34
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
ஒலிபெயர்ப்பு: Yauma yafir-rul mar-u min akheeh
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
- 35
وَأُمِّهِۦ وَأَبِيهِ
ஒலிபெயர்ப்பு: Wa ummihee wa abeeh
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
- 36
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
ஒலிபெயர்ப்பு: Wa sahi batihee wa baneeh.
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
- 37
لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ يَوْمَئِذٍۢ شَأْنٌۭ يُغْنِيهِ
ஒலிபெயர்ப்பு: Likul limri-im-minuhm yaumaa-izin shaa nuy-yughneeh
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
- 38
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ مُّسْفِرَةٌۭ
ஒலிபெயர்ப்பு: Wujoo huny-yauma-izim-musfira;
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
- 39
ضَاحِكَةٌۭ مُّسْتَبْشِرَةٌۭ
ஒலிபெயர்ப்பு: Dahi katum mustab shirah
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
- 40
وَوُجُوهٌۭ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌۭ
ஒலிபெயர்ப்பு: Wa wujoohuy yauma-izin 'alaiha ghabar a
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
- 41
تَرْهَقُهَا قَتَرَةٌ
ஒலிபெயர்ப்பு: Tarhaquha qatarah.
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
- 42
أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
ஒலிபெயர்ப்பு: Ulaa-ika humul-kafa ratul-fajarah.
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.
மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil
வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).
உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.
ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.