அனைத்து சூராக்கள்

சூரா 81

The Overthrowing

سُورَةُ التَّكۡوِيرِ

At-Takwir · மக்கா

விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா

ஆடியோ
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ

    ஒலிபெயர்ப்பு: Izash shamsu kuwwirat

    சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

  2. 2

    وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izan nujoomun kadarat

    நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

  3. 3

    وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izal jibaalu suyyirat

    மலைகள் பெயர்க்கப்படும் போது-

  4. 4

    وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izal 'ishaaru 'uttilat

    சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-

  5. 5

    وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izal wuhooshu hushirat

    காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

  6. 6

    وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izal bihaaru sujjirat

    கடல்கள் தீ மூட்டப்படும்போது-

  7. 7

    وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izan nufoosu zuwwijat

    உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-

  8. 8

    وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izal maw'oodatu su'ilat

    உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

  9. 9

    بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ

    ஒலிபெயர்ப்பு: Bi ayyi zambin qutilat

    "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-

  10. 10

    وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izas suhufu nushirat

    பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

  11. 11

    وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izas samaaa'u kushitat

    வானம் அகற்றப்படும் போது-

  12. 12

    وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izal jaheemu su'-'irat

    நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-

  13. 13

    وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ

    ஒலிபெயர்ப்பு: Wa izal jannatu uzlifat

    சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-

  14. 14

    عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ

    ஒலிபெயர்ப்பு: 'Alimat nafsum maaa ahdarat

    ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

  15. 15

    فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ

    ஒலிபெயர்ப்பு: Falaaa uqsimu bil khunnas

    எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-

  16. 16

    ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ

    ஒலிபெயர்ப்பு: Al jawaaril kunnas

    முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),

  17. 17

    وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ

    ஒலிபெயர்ப்பு: Wallaili izaa 'as'as

    பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

  18. 18

    وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ

    ஒலிபெயர்ப்பு: Wassubhi izaa tanaffas

    மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.

  19. 19

    إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ

    ஒலிபெயர்ப்பு: Innahoo laqawlu rasoolin kareem

    நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.

  20. 20

    ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ

    ஒலிபெயர்ப்பு: Zee quwwatin 'inda zil 'arshi makeen

    (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

  21. 21

    مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ

    ஒலிபெயர்ப்பு: Mutaa'in samma ameen

    (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.

  22. 22

    وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ

    ஒலிபெயர்ப்பு: Wa maa saahibukum bimajnoon

    மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

  23. 23

    وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ

    ஒலிபெயர்ப்பு: Wa laqad ra aahu bilufuqil mubeen

    அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.

  24. 24

    وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ

    ஒலிபெயர்ப்பு: Wa maa huwa 'alal ghaibi bidaneen

    மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

  25. 25

    وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍۢ رَّجِيمٍۢ

    ஒலிபெயர்ப்பு: Wa maa huwa biqawli shaitaanir rajeem

    அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.

  26. 26

    فَأَيْنَ تَذْهَبُونَ

    ஒலிபெயர்ப்பு: Fa ayna tazhaboon

    எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?

  27. 27

    إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ

    ஒலிபெயர்ப்பு: In huwa illaa zikrul lil'aalameen

    இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

  28. 28

    لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ

    ஒலிபெயர்ப்பு: Liman shaaa'a minkum ai yastaqeem

    உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

  29. 29

    وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ

    ஒலிபெயர்ப்பு: Wa maa tashaaa'oona illaaa ai yashaaa 'al laahu Rabbul 'Aalameen

    ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil

வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).

உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.

ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.