அனைத்து சூராக்கள்

சூரா 96

The Clot

سُورَةُ العَلَقِ

Al-Alaq · மக்கா

விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா

ஆடியோ
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ

    ஒலிபெயர்ப்பு: Iqra bismi rab bikal lazee khalaq

    (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

  2. 2

    خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ

    ஒலிபெயர்ப்பு: Khalaqal insaana min 'alaq

    'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

  3. 3

    ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ

    ஒலிபெயர்ப்பு: Iqra wa rab bukal akram

    ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

  4. 4

    ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ

    ஒலிபெயர்ப்பு: Al lazee 'allama bil qalam

    அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

  5. 5

    عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ

    ஒலிபெயர்ப்பு: 'Al lamal insaana ma lam y'alam

    மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

  6. 6

    كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ

    ஒலிபெயர்ப்பு: Kallaa innal insaana layatghaa

    எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.

  7. 7

    أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ

    ஒலிபெயர்ப்பு: Ar-ra aahus taghnaa

    அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,

  8. 8

    إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ

    ஒலிபெயர்ப்பு: Innna ilaa rabbikar ruj'aa

    நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.

  9. 9

    أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ

    ஒலிபெயர்ப்பு: Ara-aital lazee yanhaa

    தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?

  10. 10

    عَبْدًا إِذَا صَلَّىٰٓ

    ஒலிபெயர்ப்பு: 'Abdan iza sallaa

    ஓர் அடியாரை - அவர் தொழும்போது,

  11. 11

    أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ

    ஒலிபெயர்ப்பு: Ara-aita in kana 'alal hudaa

    நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,

  12. 12

    أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ

    ஒலிபெயர்ப்பு: Au amara bit taqwaa

    அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,

  13. 13

    أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ

    ஒலிபெயர்ப்பு: Ara-aita in kaz zaba wa ta walla

    அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,

  14. 14

    أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ

    ஒலிபெயர்ப்பு: Alam y'alam bi-an nal lahaa yaraa

    நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

  15. 15

    كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ

    ஒலிபெயர்ப்பு: Kalla la illam yantahi la nasfa'am bin nasiyah

    அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.

  16. 16

    نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ

    ஒலிபெயர்ப்பு: Nasiyatin kazi batin khaatiyah

    தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,

  17. 17

    فَلْيَدْعُ نَادِيَهُۥ

    ஒலிபெயர்ப்பு: Fal yad'u naadiyah

    ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

  18. 18

    سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ

    ஒலிபெயர்ப்பு: Sanad 'uz zabaaniyah

    நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.

  19. 19

    كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩

    ஒலிபெயர்ப்பு: Kalla; la tuti'hu wasjud waqtarib

    (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.

மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil

வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).

உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.

ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.

The Clot — Islam Word