விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா
- 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
ஒலிபெயர்ப்பு: Ara-aital lazee yu kazzibu bid deen
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
- 2
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
ஒலிபெயர்ப்பு: Fa zaalikal lazi yadu'ul-yateem
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
- 3
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
ஒலிபெயர்ப்பு: Wa la ya huddu 'alaa ta'amil miskeen
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
- 4
فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ
ஒலிபெயர்ப்பு: Fa wai lul-lil mu salleen
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
- 5
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
ஒலிபெயர்ப்பு: Al lazeena hum 'an salaatihim sahoon
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
- 6
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
ஒலிபெயர்ப்பு: Al lazeena hum yuraa-oon
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
- 7
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ
ஒலிபெயர்ப்பு: Wa yamna'oonal ma'oon
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil
வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).
உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.
ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.